சந்தம் சிந்தும் கவிதை

ப.வை.ஜெயபாலன் இல 174

இயந்திரத்தில் மின்வலுவால் ஆக்கம்
ரம்மியமாய் வீறுகொண்ட மாற்றம்
மந்திரத்தால் சிலைக்கு உரு ஏற்றும்
மத நெறியும் காணவில்லை மாற்றம்
அந்தரத்தில் சாகசங்கள் செய்ததும்
அணு திறனால் ஏவுகணை பெய்தும்
தன் திறத்தை காட்டும் எந்த நாடும்
சார்ந்துளதே மனித சக்தி ஊடும,

இறை பகவான் எங்கனுமே உருவாய்
இருக்கின்றான் தொளிலாளி வடிவாய்
நிறைவான உழைப்பாலே வீறாய்
நிகரில்லா வல்லரசு பேரால்
குறைவான ஊதியத்தில் கொணர்ந்து
குடியேற்றி அவர் உழைப்பில் நிமிர்ந்து
நிறவேறு பாட்டுக்குக்குள் ஒடுங்கி
நிற்கின்றான் தொளிலாளி அடங்கி.

பாதாள ரயில் சேவை பயணம்
பாதை எல்லாம் நெடுஞ்சாலை வதனம்
கீழ் ஓடும் சாக்கடை நீர் ஓட்ட
கிண்டி குழாய் நிலத்தோடு நாட்ட
வாழ்வெல்லாம் தன் உடலை வருத்தி
வைத்தவனை போற்றுவம் மே தினத்தில்
ஊழ்வினையே என்ற சொல்லை நிறுத்தி
உழைப்பவனை வாழ வைப்போம்
உயர்த்தி
உழைப்பாளி