வியாழன் கவிதை

நேவிஸ் பிலிப்

கவி இல(62). 23/06/22
தலைப்பு
மீளெழும் காலம்
கட்டிய வீடு ஈட்டிய தேட்டம்
பாசமாய் பார்த்து ஏக்கமாய் பூட்டி
மீளும் காலம் ஓர் நாள் வருமென
ஓரிரவில் ஓடியே போனோம் கடல் கடந்து

மீள்வோம் மீள்வோமென
காத்திருந்து காத்திருந்து
காலங்கள் நீட்சி பெற
அந்நிய தேசத்திலே அகதி வாழ்வு

சலித்துப் போனவேளையிலே
வெளி நாட்டு மோகம் பற்றிக் கொள்ள
முகவரி தேடிக் கொள்ள
பல்லாயிரம் கொட்டித் தீர்த்து

வந்து விட்டோம் இந்நாட்டில்
மீளும் காலம் வந்தாலும்
குடிஉரிமை பெற்றாலும்
தாய்நாட்டின் தாகம்
இன்னும்தான்தீரலையே