வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

பசி

உடலை உறுத்தும் உணர்வோடு போராடும்
கடலை விட காசினியில் வறுமை கொடுமை
நிழலாய் தொடரும் நிம்மதி இழக்கும்

பசியின் கொடுமை பாரை வருத்தும்
நிசியில் நிம்மதி கிடைக்காமல் போய்விடும்
களவும் செய்யும் கடனும் வாங்கும்
கண்மணி மறைக்கும் காலம் உரைக்கும்

உடலை ஒறுக்கும் பசியின் நிலையில்
உணர்வை மதிக்கா ஓட்டம் வாழ்வாய்
வறுமை வருவது வாழ்வில் நிலைப்பது
பொறுமை அழித்திடும் பொழுதையும் சுருக்கிடும்

சந்ததி தாக்கும் சரித்திரம் எழுதும்
வந்தது வரட்டும் வாழ்வை சுருக்கிடும்
நேர்மை வாழ்வும் நேரிய உழைப்பும்
ஏழ்மை வந்தாலும் எடுத்திடு முயற்சியை

நகுலா சிவநாதன்
1685