வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

நிலைமாறும் பசுமை

பாரெங்கும் நீக்கமறப் பசுமை அன்று
பச்சையின் செழிப்பிலே பூரிப்பு
பாக்களே பேசும் பசுமை
பூக்களே செழிக்கும் புவியின் பரப்பிலே!

நிலை மாறும் பசுமை இன்று
நிற்கதியின் விழிம்பிலே
செயற்கையின் உரங்களும் ஆக்குதே நச்சு
செழிப்பின் வேகம் அழிப்பின் நிற்கதியில்!

மண்ணே மலடு படுகுதே!
மாட்சிமை மங்குது மாற்றம் காணுது விவசாயம்
வரட்சியின் வெப்பம் வாட்டுது மண்ணை
புரட்சிகள் வெடிக்குது புவிப்பரப்பில்
பூக்காத் தாவரம் பெருக்கமாய் இன்று

பசுமை எங்கே? பச்சையின் செழிப்பு எங்கே?
உச்சமாய் கனி கொடுத்த மரங்கள் உலகில் எங்கே?
கனியே காயாக நனி மிகுத்து மாற்றம்
சூழல் அழுக்கும் சுமக்குது வரட்சியாய் இன்று!

நகுலா சிவநாதன்1672