சந்தம் சிந்தும் கவிதை

நகுலா சிவநாதன்

நல்லறிவே

அறிவின் மேன்மை ஓங்க
ஆற்றல் உண்டு பாரினிலே
நெறியின் வாழ்வு தறியாய்
நேர்மை உண்டு வாழ்வில்
பொறியின் வாழ்வு போட்டி
பொழுதும் ஈட்டும் நேரம்
செறிவாய் கிடைக்கும் அருளே!
செழிப்பாய் வாழ்வைச் சீராக்கும்
கலையாய் எழும் ஆற்றல்

பொங்கும் வலிமை மேவி
பொழுதும் புதுமை ஆகிடுமே
எங்கும் இயற்கை மதியில்
எடுத்து ஆளும் நற்திறமை
நுங்கும் பனையில் காயாய்
நுண்மை மதியும் சேர்ந்திங்கு
வங்கக் கடலும் ஓடும்
வளர வேண்டும் நல்லறிவே

நகுலா சிவநாதன்