வியாழன் கவிதை

நகுலா சிவநாதன்

அரிதினும் அரிது

அரிதினும் அரிது மானிடப்பிறப்பு
அதனிலும் அரிது சுகமாய் வாழ்தல்
சுத்தம் பேணி சுகமாய் இருந்தால்
நித்தம் மகிழ்வு நிலையாய்க் கிடைக்கும்

தினமும் சுத்தம் சிரசில் கொண்டால்
மனமும் மகிழ்வு மானிவாழ்வில்
தனமும் தானமும் தக்கபடி நிலைக்க
தகுதியாய் உடலும் இருத்தல் நலமே!

ஆரோக்கிய வாழ்வே அவனியில் சிறப்பு
அதனிலும் சிறப்பு பலமது கொள்ளல்
கணமது உடலும் கடுகதி விரைவும்
மனமதை மாற்றும் மாற்ற வலைகள்

விரைந்திடும் உலகில் விலைவாசி ஏற்றம்
மருந்தது கிடைக்கா மாயத் தோற்றம்
உடலின் வலுவை உயிர்ப்புடன் காக்க
வேண்டுமே!உடற்பயிற்சி உள்ளத்தில் என்றுமே!

நகுலா சிவநாதன்1663