சந்தம் சிந்தும் கவிதை

திருமதி. அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -178. 11.08.2022
தலைப்பு !
“ பசி “

அரைசான் வயிற்றுக்குள்அயராத போராட்டம்
அறியாது செய்தவினைஅறிந்ததே உலகமே
பசிவந்து முன்நிற்க் பத்துமே பறந்ததே
புசித்திட நினைக்கையில் தன்மானம் தடுத்ததே

சூழ்நிலை இடையினில் தோன்றிய கடவுளாய்
காட்சியின் அவதாரம் கடைக்காரர் மனிததெய்வம்
பசிக்கும் பந்தத்திற்கும் பக்கதுணை மனிதநேயம்
பாதிபணம் பேசாதெய்வம் பையில்அரிசி பேசியதெய்வம்

பட்டினியால் நொந்தோர்க்கு பகிர்ந்தளிக்கும் உள்ளம்வேண்டும்
பசிபோக்கி ஈந்தோர்க்கு பாரினில் இடம்வேண்டும்
ஊமையாய் சிலநொடிகள்உயிர்போகும் தருவாயில்
ஆமையாய் ஐந்தடக்கி அசையாது நின்றிருக்க

ஆண்டவனே நேரில் அவதரித்த கோலமென்ன
மாண்டாலும் மானமதை இழக்காத வேளையிலே
மகள்முன் தந்தையும் கூனிகுறுகி நிற்கையில்
மனிதக்கடவுள் தோன்றியே மதியாலே காத்திட்டார் பசி என்னும் கொடியநோய் பாரினில் பெரும்பிணி
புசித்திடச் செய்திடும் புகழ்மிக்கோர் அறப்பணி
அன்புடன் நன்றி வணக்கம்🙏
————————————————————-
அதிபர், சகோதரி கலைவாணி மோகன்…
திறனாய்வு சகோதரிகள் அனைவருக்கும்,மற்றும்
அனைத்து அன்பு பாமுக உறவுகள் அனைவருக்கும்
என்மனமார்ந்த போற்றுதல் பாராட்டுக்கள்🙏💖