வியாழன் கவிதை

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 28-07-2022
ஆக்கம் – 41
உலகாளும் நட்பே

வாழ்க்கையெனும் வட்டத்தில்
வந்து போகின்றவர்கள் பலருண்டு
உற்றார் உறவுகளுக்கு இணையாக
உற்ற நண்பனும் துணையிருப்பான்
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அக நக நட்பது போல

காலமிது காலம் கலியுக காலம்
தோழ் கொடுக்கும் தோழர்கள் வாழ்ந்த காலம்
ஓட்டுண்ணி நட்புகளின் நிகழ்காலம்
துரோகத்தால் நட்புகள் வீழும் காலம்
புலம்பெயர் தேசங்களில் புலம்பும் காலம்

தீய நட்பால் கைகளை சுட்டுக்கொண்டவர்கள் பலருண்டு
விரல்விட்டு எண்ணக்கூடிய சிறந்த நட்பும் சிலவுண்டு
கூடா நட்பு கேடா முடியும் சொல்லிவைத்தார் அன்று
சொல்லியும் கேட்பதற்கு எவருமில்லை இன்று

சீரிய பண்பும் வீரிய அன்பும் ஓன்றாகவேண்டும்
நட்பின் இலக்கணம் உலகத்தை ஆளவேண்டும்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
25-07-2022