வியாழன் கவிதை

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 07-07-2022
ஆக்கம் – 40
நானும் இந்தப் பூமிப் பந்தில்

பல்லூயிர்களில் ஓர் உயிராய்
நானும் இந்தப் பூமிப் பந்தில்
அன்னை தந்தை உறவுப் பந்தத்தால்
வாழ்கின்றேன் இயற்கையின் வழியில்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
மனித அறத்தில் புனிதமென வாழ்தவன்
பேராசையெனும் பெரும் நெருப்பில் வீழ்ந்துபோனான்
பாடுபட்டுப் பணத்தை புதைத்து வைக்கும்
பரம்பரையாய் இன்றும் தொடர்கின்றான்

உலகமே சுயநலத்தில் மூழ்க்கிடக்கின்றது
வல்லாதிக்கத்தின் வர்கச்சுரண்டலுக்குள்
நலிந்துபோன மனித குலம் மாண்டுகிடக்கின்றது
மீண்டெழுவதற்க்கு மீட்பருக்காய் காத்துக்கிடக்கின்றது

சுற்றும் பாதையை விட்டுவிலகாமல்
சுற்றிச் சுழல்கின்றது பூமி
சுற்றுச் சூழல் மாசுபட்டபோதும்
இயற்கை மட்டும் பெரும் கோபத்தில்
மெஞ்ஞானம் தன்னை அகழ்விக்கும் நல்லறிவு கொண்டு
இயற்கையுடன் இணைந்து வாழும் வழியினைக் கற்றுக் கொள்வேண்டும்
பல்லுயிர்கள் வாழ்வதற்கு வளமான பூமியாக விட்டுச்செல்ல வேண்டும்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
05-07-2022