வியாழன் கவிதை

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 23-06-2022
ஆக்கம் – 39
மீளெழும் காலம்

காலம் காலமாய் தொடரும்
உள்நாட்டுப் போர்களாலும்
கொடூர ஆட்சியாளர்களாலும்
அகதியாகின்றார்கள் மக்கள் உலகமெங்கும்

அகதியெனும் ஓற்றைச் சொல்
ஆயிரம் வலிகள் சுமக்கும்
இழப்பதற்கு ஏதுமின்றி நிற்கும் போது
உலகமே இருள் சூழ்ந்து சூனியமாகும்

தாய் மண்ணை விட்டு தாயை தவிக்க விட்டு
ஊரைப் பிரிந்து உறவுகளைப் பிரிந்து
உயிர்காக்க பல நாடுகளை தேடி-இன்றும்
அலைந்து திரிகின்றார்கள் இந்தக் கணம்வரையிலும்

வாழ்க்கையே போராட்டக்களமாகும்
காலங்களே காயங்களை ஆற்றும்
மீளெழும் காலத்தை உருவாக்குவோம்
அகதியெனும் சொல்லை அகராதியில் நீக்குவோம்

கவிதை ஆக்கம்
அல்வாய் பேரின்பநாதன்
லண்டன்
21-06-2022