சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

வாரம் 185
” இன்றைய இலங்கை”

தாய்நாடே இன்றி நீ தரைதட்டிய கப்பலானாய்
தாங்கவோ எவருமில்லை
ஐநூறு ஆண்டுகள் அந்நியராட்சி, அடிமைத்தளை
ஆனாலும் அன்றில்லை வாழ்வாதாரச்சுமை
இனத்துவேஷமும் பணப்பதுக்கலும் காரணமாய் கையறுநிலை

சொல்வது எளிது செய்வது கடிதமொய் கரைத்து பதவிபெற்றாய்
கஜானவில் காசில்லை, கபளீகரம் செய்தாய்
கேட்பதற்கு ஆளில்லை மூன்றிலிரண்டு பெரும்பான்மை
கேட்டாலும் வென்றிடுவாய்
வெகுஜனப் போராட்டம் வெடித்தாலும் தலைமறைவாய் தப்பிடுவாய்.

சனத்தொகைக்கு சமமாய் இராணுவம் சேர்த்தாய்
கடன்பட்டு ஆயுதம் குவித்தாய் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்தாய் அஞ்ஞாத காலத்தில் அவை உனக்குதவும்
திட்டமிட்டே செய்தாய்! எடுத்ததை வைத்துவிடு தப்பிப்பாய்
தாய்நாட்டின் தலைநிமிரும்,மண்ணின் மைந்தர் மனங்குளிரும்.

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.