சந்தம் சிந்தும் கவிதை

சிவா சிவதர்சன்

[ வாரம் 230 ]
“பாட்டி”

பாட்டிகளில் தங்கம் எனக்கு வாய்த்த பாட்டி
காட்சிக்கும் இனியவள் கருமங்களிலும்வல்லவள்
மாட்சிமிக்க அன்னையை ஈன்றருளிய பாட்டியவள்
எவர்க்கும் எளிதில் கிடைக்கா இனிய குணப்பாட்டியவள்

எனக்கொரு மகள் பிறந்தால் அவளுக்கும் இவளே பூட்டியிவள்
என் அன்னையை வளர்த்த நேர்த்தி எம் வம்சமே கொண்டாடும் கீர்த்தி
கண்டிப்பேஅறியா கருணை முகத்தில் காணும் பெருமை
பேர்த்தி என்று சொல்லவே நெஞ்சு நிறையும் தன்னிலே

குற்றமிழைக்கா குழந்தைகளை குவலயத்தில் காணமுடியுமா?
உற்றவளாய் தமிழ் வளர்த்த ஔவைப்பாட்டி மீண்டும் பிறந்து வருவாளா?
நற்குணத்தாலும் நல்லறிவாலும் குற்றங்கழையும் பாட்டியிவள்
ஊருக்கொரு தலைசிறந்த பாட்டியாக என்பாட்டி எம்மோடு இருப்பாளா?

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.