சந்தம் சிந்தும் கவிதை

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம் _67

“தீயில் எரியும்
எம் தீவு”

கல்லுரி இயங்கவில்லை காத்திருப்பு
தொடர் ஊந்தில்
தொலை தூரத்தில் இருக்கும்
அம்மாவிடம் செல்ல!!

வெயிலோ கொழுத்தி எரிக்கிது
மின் இணைப்பு
துண்டிப்பு
மின் விசிறி இயங்கவில்லை சட்டதிட்டம்
கேட்டால் சாட்டுப் போக்கு
சொல்லினம்
சாதாரணமாய்
கொள்ளினம்!!

முள்ளியில் நடந்த முனைப்போரில் முட்டி மோதினம்
மூச்சு தினறினம்
மூண்டி அடித்து
அலறினம் தண்ணிக்காய்
முன்வரிசையில் நின்றோமே
முள்ளு கம்பிக்குள் அடைக்கப்பட்டோமே!!

நமக்காய் சிங்கள தேசம்
குரல் எழுப்பியதா!!

அன்று நாம் அழுதோம்
இன்று சிங்கள
தேசம் அழுகின்றது
இனம் பிரிந்த
மான் போல
அரச குடும்பம் அலறுதே!!

நன்றி
வணக்கம்