சந்தம் சிந்தும் கவிதை

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு தாயகத்தில் தனி உறவு ஐந்துபத்து வயதில் ஆட்டம்போட்ட நாட்டுல நொந்துமனம் விட்டுதான் நாட்டை விட்டோம் ரோட்டில ஆண்டுகள் முப்பது அண்டைநாடு அடைக்கலம் வேண்டினோம் விரும்பினோம் வேதனையோ குறையல சொந்தநாட்டு சொந்தமொன்று சோகத்தோடு காட்டுல வெந்து வெந்துவழியின்றி வேதனையில் தவிக்குதாம் நீச்சலடித்த ஆற்றிலே நீர் குறைந்து விட்டதாம் பாச்சலிட்ட பதுங்குகுழி பாதை மறந்து போனதாம் கூடுகட்டி வாழ்ந்த சொந்தம் கூண்டோடு பெயர்ந்ததாம் வீடுகட்டி வாழ்ந்திடும் வாழ்வுநிலை இல்லையாம் ஊருக்குள்ள அகதி என்று ஒரு கூட்டம் பேசுதாம் பேருக்காக வந்ததாக பெரும்வதந்தி பரப்புதாம் சொந்த நாடு வந்தாலும் சோதனை கோலமென்று சிந்தாத கண்ணீரை சிந்திமனம் நோகுதாம் என்றுதீரும் சோகமென்று என்சொந்தம் பாடுது ஒன்றாய் கூடிவாழ்ந்த உறவுகளை நாடுது தாயக தீவினில் தனிஉறவு கூடது மாய உலகினில் மனிதனை தேடுது நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு தாயகத்தில் தனி உறவு

ஐந்துபத்து வயதில் ஆட்டம்போட்ட நாட்டுல நொந்துமனம்
விட்டுதான்
நாட்டை விட்டோம் ரோட்டில
ஆண்டுகள் முப்பது அண்டைநாடு அடைக்கலம் வேண்டினோம் விரும்பினோம் வேதனையோ குறையல

சொந்தநாட்டு சொந்தமொன்று சோகத்தோடு காட்டுல வெந்து வெந்துவழியின்றி வேதனையில் தவிக்குதாம்
நீச்சலடித்த ஆற்றிலே நீர் குறைந்து விட்டதாம் பாச்சலிட்ட பதுங்குகுழி பாதை மறந்து போனதாம்
கூடுகட்டி வாழ்ந்த சொந்தம் கூண்டோடு பெயர்ந்ததாம்
வீடுகட்டி வாழ்ந்திடும் வாழ்வுநிலை இல்லையாம்

ஊருக்குள்ள அகதி என்று ஒரு கூட்டம்
பேசுதாம்
பேருக்காக வந்ததாக பெரும்வதந்தி
பரப்புதாம்
சொந்த நாடு வந்தாலும் சோதனை கோலமென்று சிந்தாத கண்ணீரை சிந்திமனம் நோகுதாம்

என்றுதீரும் சோகமென்று
என்சொந்தம் பாடுது ஒன்றாய் கூடிவாழ்ந்த உறவுகளை நாடுது
தாயக தீவினில்
தனிஉறவு கூடது
மாய உலகினில்
மனிதனை தேடுது

நன்றி வணக்கம் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா