சந்தம் சிந்தும் கவிதை

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு உழைப்பாளி வர்க்கம் கமப்பணி தொழிலாளி கனவு கரைந்ததடா _ தம்பி சுமந்த கருக்கதை சுகப்படாது போனதடா தம்பி வயல்நிலத்தை தாரை வார்த்திடாதே வாழ்விழப்போம் _ தம்பி சுயசெலவில் வந்திடுவேன் சோர்ந்து துவண்டிடாதே _ தம்பி விவசாயம் நாட்டுக்கும் வீட்டுக்கும் சோறுபோடும் _ தம்பி தவமிருக்கேன் எப்படியும் தாயகம் திரும்பிடுவேன் _ தம்பி உழைத்திடும் உள்ளமுண்டு உடலில் பலமில்லை _ தம்பி பிழைத்திட இடம்பெயர்ந்தேன் பிறப்பிடம் மறவேனோ _ தம்பி ஆண்டுகள் முப்பத்துமூன்று அனாதைகள் ஆனோமடா _ தம்பி வேண்டாத தெய்வமில்லை விடிவுமட்டும் பிறக்கவில்லை _ தம்பி ஊருக்குள் விவசாய உழைப்பாளி வர்க்கமடா _ தம்பி பாருக்குள் இருவருமில்லை பந்தங்கள் தொடரட்டும் _ தம்பி 🙏🏻 நன்றிவணக்கம்🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு உழைப்பாளி வர்க்கம்

கமப்பணி தொழிலாளி கனவு கரைந்ததடா _ தம்பி
சுமந்த கருக்கதை
சுகப்படாது போனதடா தம்பி

வயல்நிலத்தை தாரை வார்த்திடாதே வாழ்விழப்போம் _ தம்பி
சுயசெலவில் வந்திடுவேன்
சோர்ந்து துவண்டிடாதே _ தம்பி

விவசாயம் நாட்டுக்கும் வீட்டுக்கும்
சோறுபோடும் _ தம்பி தவமிருக்கேன் எப்படியும்
தாயகம்
திரும்பிடுவேன் _ தம்பி

உழைத்திடும் உள்ளமுண்டு
உடலில் பலமில்லை
_ தம்பி

பிழைத்திட இடம்பெயர்ந்தேன் பிறப்பிடம் மறவேனோ
_ தம்பி

ஆண்டுகள் முப்பத்துமூன்று அனாதைகள் ஆனோமடா _ தம்பி வேண்டாத தெய்வமில்லை
விடிவுமட்டும் பிறக்கவில்லை _ தம்பி

ஊருக்குள் விவசாய உழைப்பாளி வர்க்கமடா _ தம்பி
பாருக்குள் இருவருமில்லை பந்தங்கள்
தொடரட்டும் _ தம்பி

🙏🏻 நன்றிவணக்கம்🙏🏻 கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா