சந்தம் சிந்தும் கவிதை

கெங்கா ஸ்ரான்லி

வைகாசியில்

வைகாசியும் பிறந்தது
வஞ்சியரும் மகிழ்ந்தனர்.
துஞ்சியவர் துயிலெழும்பி
மஞ்சளும் பூசிக் குளித்தனர்.

மஞ்சள் வெயிலிலே
மலர்ந்தன மலர்கள்.
வண்டுகள் ரீங்காரம்
சுண்டியே இழுத்தது.

மயங்கிய மலர்களும்
வாவென வரவேற்க.
வண்டினம் புணர்ந்தது
மகரந்த மயக்கத்தில்.

தேனுண்ட இனிமை மயக்கம்
தேரா மண்ணில் முடக்கம்.
அந்தோ தேயந்துவிட்டதே
வண்டின் இணக்கம்.

ரீங்காரமிட்ட வண்டு
லீலைகள் புரியும் எண்டு.
நினைத்த மலர்ச் செண்டு
நனைந்தன மழையில் நின்று.

பெருமழை பெரும்புயல்
முறிந்தன மலர்கொப்பு.
நிலத்திலே வாடி விழ
வெள்ளம் இழுத்து
சென்றது மலரையும்
வண்டையும்.
வைகாசியில் இதுவும்
ஒரு வன்மையா என நினைத்தபடி.

கெங்கா ஸ்டான்லி