வியாழன் கவிதை

கெங்கா ஸ்டான்லி

பூமி பந்தில் நானும்

நெருப்பு குழம்பு வெடித்து சிதறி
சுழற்சியினால் கோள் ஆகியது.
அதிலொன்றே பூமி என்னும் கோள்.
அண்டவெளியில் ஞாலுதல் என்றும்
உலகம் ஞாலம் என்றார் மூதாதையர்.
உல் என்றால் சுற்றுதல் ஞாலுதல் தொங்குதல்
பூமி அண்டவெளியில் தொங்கிக் கொண்டிருக்கிறது
பூமி உருண்டை என கலிலியோ
சொன்னார் நடந்தது என்ன.

சூரியன் பூமியை சுற்றி வருகிறது
பூமிப் பந்தில் சுழலுகிறோம் நாம்
புவியீர்ப்பு சக்தியினால்.
உயிரினம் வாழ்மிடம் பூமி
அதனால் பூமி தான் காலத்தைக் கூறிக்கும்.
முதலறிவு தொடக்கம் ஆறறிவு வரை.
ஆறறிவு மனிதர் என்றார்
மனிதன் சிந்திக்கக் தெரிந்தபடியால்.
சித்திக்க தெரிந்த மனிதன் என்ன செய்தான்
ஆசை மோக கொண்டு
ஆண்டழித்தான் நாட்டையே.
சர்வாதிகாரம் செய்த சிலரோ
சகலமும் விட்டுச் சென்றார் றோட்டில்.
மனிதம் தொலைத்த மனிதன்
தத்தளிக்கிறான் நடுக்கடலில் ஓடம்போல.
பூமிப் பந்தில் நானும் வாழ்கிறேன்
புதிய மனிதர் கொள்கை வித்தியாசமான மக்கள்.
பாவ இரக்கம் பாரா மாந்தர்
மரத்துப்போன மனமுடைய ஜென்மங்கள்.
இரந்து வாழும் கூட்டங்கள் பூமிப் பந்தில்
நல்லவையும் நடக்குது நல்ல மனிதரும் மனிதமும் இருக்கிறது.
அதனால் இயற்கையும் கொஞ்சம் மகிழ்கிறது
பூமிப் பந்தும் தாங்குகிறது
இந்த பூமிப் பந்தில் நானும்.

கெங்கா ஸ்டான்லி