சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

பசுமை
மனமது பசுமையானால் மலர்ந்திடும் இன்பவாழ்வு
தினமொரு வழிபிறக்கும் தெவிட்டாத வாழ்வுதரும்
நிலமும் பசுமையானால் நிழல்தரும் மரங்கலெலாம்
குலமது கூடிவாழும் குறைகளும் தீர்ந்து போகும்

கல்லூரி வாழ்வுதனை கற்பனையில் கண்டிடவும்
சொல்லரிய நினைவுகள் சுற்றியெமை தாங்கிடவும்
அன்பான குடும்பமுடன் ஆடிப்பாடி மகிழ்ந்ததுவும்
என்னென்று சொல்லடுவேன் எல்லமே பசுமையாகி

குருகுலமும் காந்தியமும் கொடுத் அன்பால்
தருகின்ற நினைவலைகள் தித்திக்கும் பசுமையாய்
பட்டாம் பூச்சிகளாய் பறந்திட்ட அக்காலம்
வட்டமிட்டு நெஞ்சமுடன் வருகிறது பசுமையாய்/‘
கமலா ஜெயபாலன்