சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

“தீயோர்க்கு உதவுதல் தீது”
செங்குத்து மலை உச்சி ஒன்றில் அன்ன கூட்டம்
சேர்ந்து ஒன்றி வாழ்ந்தனவாம்
இல்லை பயம் வாட்டம்
தங்கியுள்ள அவற்றை வேடர் வேட்டையாட நாட்டம்
தாம் கொண்டு தோற்றனராம்
முயற்சி பல போட்டும்
எங்கிருந்தோ ஒரு புயல் நாள்
மலைக்கு வந்த காகம்
இடம் கேட்டு கெஞ்சியதாம்
இரவு தங்க மட்டும்
தங்க இடம் இரங்கி தர எச்சம் போட்டு விட்டு
தான் காகம் திரும்பியதாம்
நன்றி கூறி விட்டு”

***
“எச்சத்தில் இருந்து ஆலம் விதை விருட்சம் ஆக
இவை விட்ட விழுதுகளோ மண்ணை நோக்கி வீழ
பட்சிகளை விழுதில் ஏறி வேடர் வேட்டை யாட
பரம்பரையே இல்லாமல் அன்னக்கூட்டம் மாள
துட்டருக்கு இரங்கி அன்னம்
உதவி செய்ய போக
துயங்கள் அழிவு இந்த கதை
உணர்த்து. மாக
எட்ட வைப்போம் தீயோரை
மனம் இரங்கியேனும்
இணைத்திட்டால் அன்னத்தின் கதி
எமக்கும் நேரும்”