சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

இல்லறத்தில் பருவத்தில் இணைந்த போதும்
இல்லாத பிள்ளை குறை
இணைந்த போதும்
சொல்லரிய வளம் இல்லா
சோகத்தூடும்
மெல்லென்ற சிரிப்பை என்
மேனி தூவும்.

வயதான பிள்ளைகளில்
வாழ்வை மேலும்
வளமாக்கி வாழ்விக்க
ஆர்வம் சீறும்
புயலாக பெரு நோய்கள்
பொருதி நாளும்்
போட்டுடலை வாட்டும் எந்த
பொழு தென்றாலும்
சுயமாக குடும்பத்தை சுமந்து தேற்றும்
சுந்தர நல் மனையாளின்
ஆற்ற லாலே
பயனாக வாழ்கின்றோம் பலரும் போற்ற.

எங்கெதிலே குறை இல்லை
எவர்க்கும் தொல்லை
இடர் பாடு ஒப்பீட்டில்
போதா எண்ணம்
தங்களது வருவாய்க்கு
தகுந்தால்போல
தம் தேவை சுருக்குவதே
தகுந்த வாழ்வு
எங்கும் உண்டு ஏற்ற இறக்கம்
இருப்பு போதும்்
என்று மனம் எண்ண
எம்மில் சிரிப்பு தாவும்.
-எல்லாளன்-