சந்தம் சிந்தும் கவிதை

-எல்லாளன்”-கைகூடுமா கனவு”

நேற்றுப்போல் இருக்கிறது இளமைக் காலம்
நித்திரையும் மறந்து பல
பணியில் நாட்டம்
ஆற்றலுடன் களம் பலதில் ஓடிஆடி
அங்கெல்லாம் புகழோடு வெற்றி சூடி
ஈற்றில் இங்கு தஞ்சமென குடியுமேறி
இங்கேயும் சுயநிறைவு நிலையுமாகி
ஆற்றாத துயர் தந்த பிள்ளை பேறு
அடைந்ததினால் மனதுக்குள. மகிழ்வுமேவி

**கட்டிவைத்த மாட்டுக்கு புல்லு மேய
கயிறு சுற்றும் வட்டமே எட்டுமாப்போல்
ஒட்டி நின்ற கலை சமூக உணர்வினாலே
உள்ளம் எனை இயகிகிய அப் பாதையூடும்
கிட்டியது தன் நிறைவு என்ற போதும்
கீழ்நிலையில் உள்ளோர்க்கு நிறைவாய் ஏதும்
கொட்டித் தர முடியாத வலியும் வாட்டும்
கூட்டித்தரா கஞ்சனென்ற பழியும்
கேட்கும்

*பேரர் ஒத்த வதினிலே பிள்ளை இரண்டு
பிறந்த நாள் கண்டு இப்போ இருபத்தொன்று
ஆதரவை தொடர்தளித்து தகைமை கூட
ஆளாக்கி இல்லறத்தே இணைத்து பார்க்க
ஊறு அற்று உடலோடு உயிர் நிலைக்கும்
பேர ருளை தருவானோ இறைவன் கையில்
பேரர்களை தாலாட்டும் காலம் மட்டும்.