வியாழன் கவிதை

இரா விஜயகௌரி

நன்றியோடு சில வார்த்தை………

கடும் பசி பட்டினி வாடிய குழந்தை
வழி தெரியா. பாதை ஏக்கத்தின் நொடிகள்
தெளிவில்லா. எதிர்காலம்
திசைநோக்கும். பேரிடிகள்

சூறாவளிக்குள் ஓர் வாழ்வுப்பயணம்
களவு கூட பசியில் களவாடப்பட
நடுங்கிய விரல்களுள் பதுங்கிய உணர்வு
குழந்தையின் தன்மானம் போய்விடுமோ

காத்துக்கனிந்த. பரிவான உங்கள் கரம்
வேர்த்துக் கிடந்த உணர்வுக்கு காற்றாக
பரிவோடு காட்டிய திசையில்-உங்கள்
மனித நேயம் உயிர்கலந்தது

வாழக்கைப் பாடமிது. பரிவோடிருங்கள்
பகுத்தறிந்து கணத்தில் வார்ப்பிடுங்கள்
ஏழைகள் உருவாவது காலச்சுழலினாலும் தான்
வெந்து மடிவது. இரந்தவனை இறப்பிடிலும்போது

உணர்வுகள் செத்து உயிர்வாழ்வேது
வாழக்கை குறுகியது வளமாக்க உரமிடுவோம்
இறப்பிலும் இறவாது இனிய செயல்கள்
இரப்பவன் இல்லாதவனல்ல கொடுப்பவன்இழப்பவனுமல்லவே