வியாழன் கவிதை

இரா விஜயகௌரி

பிரியாத உறவுகள்

விரியாதகனவுகளோடு
நித்தமும் பயணிக்கும்
பிரியாத உறவுகள் அவை
புரியாத நேச இழைவெழுத

அழியாத வலைப்பின்னல் ஆங்கே
மொழியாத. உணர்வுகளை
விழியால் குழைவெழுத-நித்தம்
அழையா விருந்தாளி. போலிவர்

சொரியாத மலராய் சொரிந்தபடி
வரைகின்ற. மலர்வில் மனம்மகிழ
எழிலாகும். விடியலே. -நம்மை
உரிமைக்குரலாய் உயிர்ப்பிக்கும்

பரிவோடு. கரைகின்ற பாசமும்
பழகிடில் கனிந்திடும் நேசமும்
வேஷமே. இல்லாத காதலும்
அன்பின் பரிமாணப்புதையல்களாம்

ஆம். குழந்தைகள் எழுதும் உயிர்ப்பினில்
அடடா வானவில். பேரெழில் மொழிந்திட
எத்தனை அழகியல் உறவிலே
பிரியாத வரமாகும் தலைமுறை