வியாழன் கவிதை

இரா விஜயகௌரி

உலகப்பூமிப்பந்தில் நானும்……..

பூமிப்பந்தில் நானும் இங்கு
பல்லின உயிர்தனில் ஒன்று
பகுத்து அறிந்து பார்த்திடில் நாமும்
வரவும் செலவும் வகுப்போர்

நிலையென இங்கு ஏதுமில்லை
நிலைப்பென எண்ணி தின ஓட்டம்
சடுதியில் வீசிடும் புயலொன்று
சரித்திரப் புத்தகம் தனைக் குலைக்கும்

எத்தனை அதிசயம் இங்குண்டு
விரிந்த பரப்பின் விசித்திரங்கள்
மூடிய நான்கு சுவர்களுள்ளே
தினமும் நமக்கேன் வீண் பேச்சு

எழிலாம் நொடிகள் நமக்கிருக்க
ஏதிலி போல ஓடுகின்றோம்
வரிக்கும் கணங்களை வார்ப்பிலிட்டு
விரிக்கும் வாழ்வை வெற்றி கொள்வோம்

பூமிப்பந்தில் ஒரு புள்ளி
தொட்டதன் பொழுதை பதித்தெழுவோம்
இரவும் பகலும் வாழ்விலுண்டு
உணர்ந்தால் மிரட்சி களைந்து விடும்