வியாழன் கவிதை

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -175 30.06.2022

தலைப்பு !
“என்றுதணியும் ஏழ்மைக்கோலம்”

தாய்மண்ணை கட்டியாளும்
தாயக சொந்தங்களே
நோய்கொண்டு உயிர்கள்
நொந்தழிந்தோர் கொஞ்சம்

யுத்தத்தில் கொஞ்சம்
யுவதிகள் கொஞ்சம்
சத்தமின்றி அழைத்து
சடலமாக்கினர் கொஞ்சம்

பட்டினியில் கொஞ்சம்
பழிகொடுத்தே நின்றோம்
விட்டுப் பிரிந்த உறவுகள்
விடையின்றி மாயம்

எஞ்சியது கொஞ்சம்
எம்தமிழ் சொந்தங்கள்
தஞ்சமென வாழ்ந்தனர்
தவமிருந்து மண்ணில்

அங்கொன்றும் இங்கொன்றும்
அன்னை மண்ணை ஆளும்மக்கள்
வாழும்வரை போராட்டம்
வாழத்துடித்து மீள்ஓட்டம்

எரிபொருளும் இல்லை
எரித்துசமைக்க உணவும்இல்லை
வரிசையில் எரிபொருளுக்காய்
வாதம்செய்தும் பயனும்இல்லை
உண்ண உணவில்லை
உறவிற்கு நட்பில்லை
மண்ணில் விதைத்திட
மண்ணுயிர் உறமும்இல்லை

எவ்வளவு அழியுமோ
எல்லாமும் அழிந்தன
அவ்வளவும் இழந்தும்கூட
அன்னை மண்ணைவிடவில்லை
இழப்பதற்கு ஒன்றுமில்லை
இழந்துவிட்டோம் எல்லாமும்
குழப்பத்தில் கொஞ்சம்
உயிர்கள் மட்டும்

உலகநாட்டு உறவுகள்
உதவும்கரம் மணமில்லையோ
களகம்முடிந்தும் கண்ணீர்விட்டோம்
என்று தணியும் ஏழ்மைக்கோலம்
ஒன்றாய்க்கூடி ஒற்றுமைநாடி
நாட்டை மீட்டு நலமுடன்தாரீர்
கூட்டுப் பறவைகள் கூடிவாழ்ந்திட

நன்றி . அதிபர் கலைவாணி மோகன் அவர்களுக்கும்
கவிப் பார்வை சோதரிக்கும்.. என்உளம் நிறைந்த
போற்றுதல்்பாராட்டுக்கள். தொடர்வோம் 🙏💖