வியாழன் கவிதை

அபிராமி கவிதாசன்

கவிஇலக்கம் -172 12.05.2022

கவித் தலைப்பு !
“ நிலைமாறும் பசுமை”

விலைவாசி ஏற்றமே
விலைநில மாற்றம் தான்
நிலைமாறும் பசுமை
நிதியேந்தும் நிலமையாம்

நிறம்மாறும் உற்பத்தி நிலையற்ற வாழ்வாதாரம்
திறமான உழவும் தொழிலுமே திடமாகும்

பசிபோக்கும் பயிர்தொழில் பசுமையின் புரட்சியே
புசித்திட விசமற்ற பசுந்தாவரம் இல்லையே

வானம் பொயத்ததுவே வனமானதே
விவசாயம்
தானத் தவத்தினிலே தைரியம்
காத்தோமே

காடு செழித்திடவே கரைசேரும்
நாடென்பார்
வீடும் உணவின்றி விதியற்றுப் போயிடுமே

உழவுக்கும் தொழிலுக்கும்
உரித்தான விவசாயி
நிழலுக்கும் மரமின்றி நிலையற்ற
விவசாயம்

தானேபற்றி எரியும் தணியாத
வனமுண்டு
வீணே வளமிழந்து விறகாகி போனதுவே

நிலைமாறும் பசமையை நிலைநிறுத்த உயருவோம்
விலையேற்றம் குறைத்திட வினைகள்பல தொடங்குவோம்

நன்றி 🙏