மாற்றம் வேண்டும்….
அழலோடு விளையாடி அரசாளுமே – அதன்
நிழலோடு நிதம் பேசும் சமாதானமே
குழலோடு ரவை பாடும் கோரங்களே – அதை
குழுவோடு கொண்டாடும் பாவங்களே – மக்கள்
அழுகின்ற அவலங்கள் அரங்கேறுதே – அதை
அழகென்று இரசிக்கின்ற அரசாங்கமே.
வாழ்க்கையும் பகையாகி வளர்கின்றதே
வரலாறும் புகையாகி மறைகின்றதே
அதிகாரம் அரசாளும் நிலை மாறவே – புதிய
அகராதி படைக்கின்ற நிலை வேண்டுமே.
வாழ்கின்ற மக்களுக்கு வளி காட்டவே – உலகில்
வளமான அரசெங்கும் எழ வேண்டுமே
ஏராழ்ந்த நிலம் வாழும் பயிர்போலவே – மக்கள்
பாராளும் நிலையொன்று வரவேண்டுமே!
கவிக்கோ பரம விஸ்வலிங்கம்