வியாழன் கவி
ஆக்கம். 89
கோட்டா கோ கம
கிராமம் அமைத்து
கிரமமான போராட்டம்
ஐம்பது நாள்
தொடும் போராட்டம்
இன பேதம்
மத பேதம்
மொழி பேதம்
இன்றியே இனைக்கும்
போராட்டம்
மக்கள் சக்தி
மகேசன் சக்தி
ஒரு முகப்பாட்டில்
ஓங்கி ஒலிக்கும்
போராட்டம்
நாடு ஆள்பவன்
காடு ஆள்வது
நமக்கு ஒன்றும்
புதிமை இல்லையே!
காலங்கள் பதில்
சொல்ல
உண்மைகள் விழித்திட
கோட்டா கோ கம !!!
க.குமரன்
யேர்மனி