சந்தம் சிந்தும்
வாரம் 174
முந்தி போடும் பிள்ளையார்
புது புது ஆடைகள்
புறண்டோடும் தொகைகள்
வந்தவருக்கு வரவேற்ப்பு
வராதவருக்கு புன்சிரிப்பு
பட்டு சேலைகள்
பவணியிலே
பார்த்த எல்லாம்
பள பளப்பு
எந்த புடவை
நல்லது என
முந்தி போட்டு
பார்க்கவே
பிள்ளையார் வாங்க
முந்தி போடுங்க
என்றதுமே….!
பிள்ளையார்
குஞ்ச முந்தியை
போட்டாரே
தன் மேலே
அழகு முந்தி பார்க்க
ஆயிரம் பெண்கள் கூட்டம்
அவர்களுக்கு நடுவிலே
மாடல் பிள்ளையார் !!!
க.குமரன்
யேர்மனி