புரிவினை அடை மனமே
மென்மையான உள்ளம் கொண்டோர் மேலோராக
வன்மத்தை மனதில் கொண்டோர் கீழோராக
அன்னை சொல்லை மதிப்போரெல்லாம் நல்லோராக
மண்ணில் அழிவை செய்வோரெல்லாம் பொல்லாராக
கற்றோரை கனம் பண்ணுதல் முறையே
அற்றோரை ஒதுக்கி வைப்பதும் குறையே
வற்றாத அன்பை கொண்டோரெலாம் இறையே
சிற்றறிவால் எட்டாதவொன்று குறையுமொரு நிறையே
உள்ளபொழுது ஈர்ந்தளித்தல் இதுதானே மனிதம்
எள்ளையும் எட்டாய்ப்பகிர்தல் மானுட புனிதம்
செல்வம் வரும்போகும் வரட்டுமங்கே புரிதம்
உள்ளத்தால் உயர்ந்தோரே
இடம்பிடிப்பார் சரிதம்
ஜெயம்
11-03-2022