வியாழன் கவிதை

jeyam

kavi 597

கர்வம் தனிமைப்படுத்தும்

நான் என்ற எண்ணங்கொண்டாலது அழிவைக் கட்டிடும்.
வீண் அதை விட்டொழித்தால்
ஆனந்தம் கைக்கெட்டிடும்
காண்கின்ற சக மனிதரெல்லாம்
உயர்ந்தவராகப் பட்டிடும்
ஆண்டாட்டிற்கும் நல்லதோர் பெயர் வாழ்வில் ஒட்டிடும்

எனக்கு மட்டும் எல்லாந்தெரியுமென
கிரீடம் அணியும்
கனத்த அறிவுத் தடிப்புடன்
என்னைவிட்டாலில்லையெனத் துணியும்
தினமும் பொழுதை விடியவைக்கும்
சேவலாகவா இனியும்
கணக்கை தப்பாய் போட்டதால்தானே
சேவலுக்கு தலைகுனிவும்

தன் தகுதிக்கு முன்னாலிங்கு யாருமே இல்லையென்று
என்னை புகழ்ந்து பாராட்டுங்களென
அறைகூவலை விடுத்துக்கொண்டு
கண்மூடித் தூங்கையிலும் வாழ்திவிடும் கனவுகளைக் கண்டு
என்னென்னவோவெல்லாம் செய்யுமே மனம்
அறிவினைத் தின்று

அகந்தை புதைந்த சிந்தையது
விதைத்துவிடும் சுகத்தை
முகத்தை மூடிய முகமூடியும்
உவகைப்படுத்தும் அகத்தை
ஜெகத்தில் இதுவல்லவே வாழ்வு
பிரதிபலிக்காது நிசத்தை
தகர்த்தால் இறுமாப்பை அடையலாம்
அழகான சீவிதத்தை

ஜெயம்
08-03-2022