கவிதை நேரம்-15.12.2022
கவி இலக்கம்-1614
மகிழ்வால் தை பிறக்கட்டும்
—————————————
மகிழ்வால் நிறைந்தே உலகாகட்டும
மனதில் இருள் அகற்றி ஒளி பிறக்கட்டும்
தொற்றுக்கள் தொலைந்து உயிர் காக்கட்டும்
போர்கள் மறைந்து அமைதி கிடைக்கட்டும்
புயல்கள் தொலைந்து தென்றல் வீசட்டும்
பகைமை மறைந்து அன்பு மலரட்டும்
பல்லின இணைவில் மனிதம் வாழட்டும்
நல்லவர் நோக்கம் நிறைவு பெறட்டும்
தலை நிமிர வாழ்க்கை அமையட்டும்
நாயகன் இயேசு நல் வரவாக பிறக்கட்டும்
மக்கள் நலம் வளம் பெற்று வாழட்டும்
பழைய ஆண்டை நன்றியுடன் அனுப்பி வைப்போம்
இரவு பகலாய் இயங்கும் வானொலியை
நற்றமிழை சொல்லி தந்த வளர்த்தெடுத்த
இளையோரை அறிவை பெருக்கி உயர வைத்த
நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக
பற்பல விடடயங்களை பண்புடனே தந்த
அறிவை வளர்த்து ஆற்றல்கள் தேட வைத்த
நட்புகளை சேர்த்து எண்ணமெலாம் எழுச்சி பெற
மறந்து போன உறவுகளை பகிர வைத்த
ஏணிபோல ஏற்றி வைத்த வானொலிக்கும்
நன்றி வாழ்த்து கூறி அனுப்பி வைப்போம்
புதிய ஆண்டில் பல மாற்றம் காண்பதில்
புதிய ஆண்டை கை கூப்பி வரவேற்போம்
மகிழ்வாய் இல்லங்கள் நிறைந்திட வேண்டி
வருவாய் தருவாய் மகிழ்வாய் புதிதாய் பிறப்பாய்