சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-13.12.2022
கவிதை இலக்கம்-204
விடியல் வருமா
————————–
மார்கழி வெண் பனியினிலே
மனதை மயக்கும் குளிரினிலே
மாட்டுத் தொழுவமதினிலே
மரியன்னை மடிதனிலே
மன்னவன் இயேசு பிறப்பாரே
அன்று பிறக்க இடமின்றி அலைந்தீரே
இன்று இருக்க வீடின்றி தாயக இனமே
அன்று மனிதருக்கய் பலியாக்கி வந்தீர்
இன்று மக்கள் உணவின்றி பசியாகினர்
தெருவெல்லாம் மின் விளக்கு ஒளிருது
வெள்ளம் சூறாவழி ஆட்டி படைக்குது
குடிசையெலாம் இருளில் மூழ்குது
மக்களெல்லாம் அழுகுரல் கேட்குது
கரையோர மக்கள் வள்ளங்கள் கடலோடு போகுது
மரணமெல்லாம் வடிவம் எடுக்குது
துன்பமெலாம் மொத்தமாய் வருகுது
வாழ்க்கையே நிற்கதியாய் போகுது
இயேசு பாலன் பிறப்பு நாள் நெருங்கி வருகுது
வாழ்வில் விடியல் கேட்டு மானிடம் வணங்குது