வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-30.11.2023
கவி இலக்கம்-1778
காலைக் கதிரவன்
—————————
காலைக் கதிரவனே
நீ எங்கே ஒளந்து கொண்டாய்
துயில் விட்டெழு கதிரவனே
இருள் சூழ்ந்துள்ள பூமியாக ஆனதே
விடியலுக்காய் காத்து நிற்கிறோம்
இருள் அகற்றி ஒளியே தந்திடுவாய்
இன் முகத்துடன் பல முகங்கள் இல்லை
சிறுவர்கள் பள்ளி சென்று கற்க தாமதே
எலாம் அடித்தும் போர்த்து மூடுகின்றனர்
விவசாயிகள் உழவு செய்ய முடியலையே
உணவு வேண்டி மக்கள் காக்க வைத்தாய்
காலமும் மாறி பனிக் குளிரும் ஆரம்பமே
வாகனம் மூடுது பனி சுரண்டலில் பணியாளர்
நீ எழுந்து உதயம் தந்து வெளிச்சமாக்கு
இறைவனின் கொடையே ஆனந்த வாழ்வு
புதுமைகள் செய்திட இருள் அகற்றி ஒளிர்ந்திடுவாய்