வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-28.09.2023
கவி இலக்கம்-1753
கண்ணீர் வணக்கம்
————————–
அன்பெனும் மூன்றெழுத்திலே
எமது மைத்துனரான அமரர் ஜெயந்திரன் அன்ரன் திருச்செல்வம்
உள்ளமெனும் அகத்தினில் வாழ்ந்து
பாலிலும் இனிய இன்சொல் பேசி
பண்பிலே வாழ்வினை வகுக்க
இறைவன் பதமாய் உதித்தீர்கள்
மாமாவின் மகன் மூத்தவனாக
ஏழு சகோதரர்களுடன் கூடிப் பிறந்து
தங்கை ஜெயமலரை கைப் பிடித்து
இரு பிள்ளைகளான நிலோஜன் ஒக்ஸ்மன்
சிறந்த தந்தையாக வாழ்ந்தீர்கள்
பேரப் பிள்ளைகள் மூவரை கண்டு மகிழ்ந்தீர்கள்
மருமக்கள் இருவரையும் அன்புடனும் பண்புடனும்
நாளெல்லாம் கொண்டாடி அளவளாவி
கிடைத்த உறவுகளோடு நட்பினையும் உயிரென மதித்து
உண்டி கொடுத்து உபசாரம் செய்து
உதவி கேட்கும் முன் கரம் கொடுப்பீர்கள்
சகோதரர் உறவுகளை அண்ணனாக நண்பனாக
பாசத்தை அள்ளி சொரிந்து அத்தனையும் செய்தீர்கள்
அன்பு கொண்ட உள்ளங்கள் என்றும் அழியாது
எல்லோர் உள்ளங்களிலும் நிறைவாக வாழ்வீர்கள்
என்றும் எம் அன்பில் நீங்காத உயிராக
அடித்தளம் அமைத்து சிறப்பீர்கள்
நெஞ்சம் வலிக்கின்றது பிரிவின் நினைவாலே
உங்கள் பிரிவு எம்மால் ஆற்ற முடியவில்லை
மண்ணில் பிறந்து மண்ணிற்கே அடங்கினீர்கள்
உங்கள் ஆன்மா இறைவன் சன்னிதியில் இளைப்பாறட்டும்
ஆன்ம ஈடேற்றம் பெற நாளாந்த ஜெபத்தில் மன்றாடுவோம்