கவிதை நேரம்-14.09.2023
கவி இலக்கம்-1750
மனித வாழ்வின் இலக்கு
——————————
மானிட பிறப்பு அதிசயமானது
மாண்பும் பெருமையும் மிக்கது
வாழும்போதே இலக்குடன் வாழ்வது
அற்புத வாழ்வு அடைவதில் கிடைப்பது
நம்மவர்க்கு பெரும் சிறப்பன்றோ
பால் தரும் விலங்கு நன்றியை கேட்பதில்லை
கனி தரும் மரங்கள் பலன் பார்ப்பதில்லை
தாயை விட சிறந்தது எதுவுமில்லை
குடும்ப வாழ்வு இறைவன் கொடையே
நிலை தடுமாறும் இவ்வுலகினிலே
வாழ்வதும் உயர்வதும் மனித கையிலே
வாழ்க்கை குட்டி சுவராக்குவதும் மனிதனே
நிலை வாழ்வை அடைவதே இலக்கு
நிலையில்லா பணம் நிம்மதி தருவதில்லை
இறுதி வாழ்வில் எம்மோடு வருவதுமில்லை
வாழும்போது அனுபவித்து வாழ வேண்டும்
நல்லதை நினைத்தே நன்மை செய்வோம்
இலக்கு வாழ்வில் முன்னேற்றம் பெற வாழ்வோம்