கவிதை நேரம்-07.09.2023
கவி இலக்கம்-1746
எழுத்தறிவில்லை எனில்
——————————–
எண்ணும் எழுத்தும் கண்ணென தகும்
இவை இரண்டும் இல்லையெனின்
மனித வாழ்வு மேம்பட முடியாதே
வாய்மொழி மூலம் பகிர்ந்து கொள்ள
எழுத்து மூலம் தெரிவித்து கொள்ள
தாய்மொழி கற்றல் அவசியமன்றோ
ஆதி கால அறிவாளிகள் நூல்களாக
எழுத்துக்களால் விட்டு சென்றவர்களே
படித்து பலதையும் அறிதல் அவசியமன்றோ
பன்மொழி கற்றும் பயன் பெறலாமே
பள்ளிக்கு சென்று பலதையும் கற்க வேண்டும்
கற்றதை மற்றவர்க்கு பகிர்ந்தளிக்க வேண்டும்
ஒழுக்கம் நிறைந்த பண்பு வேண்டும்
தனி மனிதனுக்கும் பல்வேறு மனிதருக்கும்
எழுத்தறிவு மிக முக்கியமன்றோ
தவறின் வேலை வாய்ப்பு கிடைப்பது அரிதன்றோ
வேறு நாடுகளுக்கு பயணிக்க முடியாதே
சமுதாய வளவில் முன்னிற்க முடியாதே
பின் தள்ளப்பட்ட சந்தர்ப்பம் கிடைக்குமே
புரட்டாசி 8ம் திகதி எழுத்தறிவு தினமாமே
யுனேஸ்கோ நிறுவனம் கொண்டாடப் படுகின்றதே
எழுத்தறிவு என்பது மனித வாழ்விற்கு முக்கியமன்றோ