சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-05.09.2023
கவிதை நேரம்-230
விடுமுறை களிப்பு
————————–
விடுமுறை வந்தாலே
மன மகிழ்வில் வியப்பு
வருடந்தோறும் வரு என நினைப்பு
வந்து விட்டதே என தாயகம் போக முடிவு
உறவுகளை சந்தித்து சொந்தம் பகிர்வதில் களிப்பு
விரும்பிய உணவுகளை உண்பதில் அக்களிப்பு
குடும்ப உறவுகளுடன் கோவில்கள் சந்திப்பது மகிழ்வு
கலை விழாக்களும் கலாச்சார முறைகளும்
பகிர்வதில் பெரும் மதிப்பு
சுட்டெரிக்கும் வெயிலிலும்
கடற்கரை கீரிமலை குளிப்பு
தாயக வளங்கள் பார்த்து
மகிழ்வதில் பெரும் மகிழ்வு
சொந்த பந்தங்களுடன்
உறவாடி மகிழ்வது மன மகிழ்வு
தாயகத்தில் கால் பதித்தால்
உடலின் நோய்கள் கணப்பொழுதில்
ஓட வைக்கும் மன நிறை விடுமுறை களிப்பு