வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-24.08.2023
கவிதை இலக்கம்-1738
என்று தீரும்
—————–
வான் பரந்த தேசமெலாம்
வளமாக சிறந்து விளங்குகையில்
எம் தேசமே அழிவு பாதையில்
சிதைந்து மறைந்து போகிறதே
உள் நாட்டு கடும் பபோரினாலே
உயிர் காக்க இடப் பெயர்வே
அகதி முகாம்களில் அடைத்து வைப்பு
அல்லற்பட்ட உறவுகள் கடும் வதைப்பு
தவறிப்போன எம் உடன் பிறப்பு
வெள்ளை வான்களில் கடத்தி ஒளிப்பு
இன்று வருவார் நாளை வருவார் காத்து கிடப்பு
வருடங்களாக பல இடங்களில் மறைப்பு
தேடி தேடி அலைந்து உறவுகள் களைப்பு
போராட்டங்களில் பெற்றோர் இறப்பு
குழி தோண்டி உடல்களின் புதைப்பு
பூமி காணிகள்தோண்ட சடலங்கள் மீட்பு
எலும்புக் கூடுகளாக எண்ணிக்கை திகைப்பு
எம் மக்களுக்கு உறவுகள் பிரிவு பெரும் இழப்பு
என்று தீருமோ என பெரும் எதிர்பார்ப்பு