கவிதை நேரம்-17.08.2023
கவி இலக்கம்-1734
உறவின் உயிரான
மணி மறைந்தார்
——————————-
பால் வளம் செறிந்த பசுந்தீவினிலே பிறந்து
எமது வீட்டின் கிட்டடித் தொலைவிலே வாழ்ந்து
ஜேம்ஸ் ஆசிரியர் அந்தோனியாப்பிள்ளை மூத்த மகளாகி
உறவாக பள்ளித் தோழியாக சக மாணவியாக
ஆரம்ப கல்வி முடித்து உயர்கல்வி யாழிலே படித்து
விடுமுறை காலங்களில் ஒன்று கூடி திரிந்த நண்பி
லண்டன் நகரிலே வாழ்ந்த மேரி புஜ்பம் ,மணி செல்லமாக
மருது கணவன் மறைந்ததும் ஆறு பிள்ளைகள் பேரப்பிளளைகளோடு சந்தோச வாழ்வில் வாழ்ந்து
எம் நினைவுகளில் என்றும் நிறைந்திருந்தும்
திடீர் பேரிழப்பின் பிரிவாற்றாமையால்
துயர் செய்தி பேரதிர்ச்சியில் உறைந்து போனேன்
லண்டனில் நீண்ட காலம் வாழ்ந்து வந்தீர்
வட்ஸ் அப் நட்பாக நல் மனதோடு தொடர்பில்
ஒவ்வொரு நாளும் குட் மோனிங் எழுதி
பள்ளி ஞாபகங்கள் ஊர் புதினங்கள் பகிர்ந்த நண்பி
கடைசியாக வெள்ளிக்கிழமை எழுதி விட்டு
மாலை திடீரென மருத்துவமனை போனீரோ
சனி ஞாயிறு வட்ஸ் அப்பில் தேடினேன்
பதில் கிடைக்காத படியால் ஏக்கமடைந்தேன்
அன்பொழுகும் அருளார்ந்த திரு முகம்
ஆசையோடு உறவு கூறி அழைக்கும் நேசம்
உள்ளமெலாம் உவந்தளிக்கும் புன் சிரிப்பு
கள்ளமற்ற நனி சிறந்த கதையுமாய்
துயரச் செய்தி இரவு அறிந்து கவலையானேன்
இப்பவும் என் இரு செவிகளிலும் குரல் ஒலிக்கிறது
உமது பெயர் வட்ஸ் அப்பில் மலர்களாக நிறைந்துள்ளது
ஆனால் நீங்கள் இன்றில்லை கதைப்பதற்கும் இல்லை
இதுதான் மனித வாழ்க்கை என உணர்ந்தேன்
உமது ஆன்மா இறைவன் சன்னிதியில் இளைப்பாறுவதாக
என்றும் எனது ஜெபத்தில் நினைவு கூருவேன்
நித்திய இளைப்பாற்றி அளித்தருளும் ஆண்டவரே