சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.08.23
கவிதை இலக்கம்-228
தலையீடு
——————-
தேவையற்ற விடயங்களில்
தலையீடு செய்து குழப்பி விட்டு
வேடிக்கை பார்ப்பதில் பலர்
குடும்பங்களிலே தலையிட்டு
கணவன் மனனைவி பிணக்குகளை ஏற்படுத்தி
பிரித்து வைப்பதில் மும்மரமாக பலர்
பள்ளிப் பிள்ளைகள் விடயத்தில்
ஆசிரியர்மாரோடு தேவையற்ற தலையீடுகள்
கல்வி பாதிப்பிற்கு காரணமாக பெற்றோர்
காதலர்கள் இடையில் பிரிவுகளை ஏற்படுத்தி
பிரித்து வைப்பதில் சில நண்பர்
இன வேறுபாடு ஏற்பட
தேவையற்ற தலையீட்டில்
அரசாங்க துவேச தலைவர் ஒரு சிலர்