வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-10.08.2027
கவி இலக்கம்-1730
ஆடிக்கலவரம்
———————–
தமிழ் மக்களால் மறக்க முடியாத நாள்
இன வெறியர்களால் கொன்றழித்த நாள்
ஆடிக் கலவர கறுப்பு யூலை நாள்
கதறக் கதற வெட்டி படுகொலையான நாள்
மாண்டு போன எம் இனத்தின் நினைவு நாள்
நினைவுகள் மீளும் பிரிவுகளை மறக்க முடியாத நாள்
ஒவ்வொரு வருடமும் வந்து போகும் கரிய நாள்
ஆவணி பிறந்தாலும் வருடங்கள் கடந்தாலும்
நாமும் அகப்பபட்டு பலதுமாய் அனுபவித்த நாள்
கண்டியிலே பயத்திலே முடங்கிய நாள்
குடும்பமாக வீடு வீடாக அடைக்கலம் தேடிய நாள்
கடைகளை எரித்தும் சாமான்கள் கொள்ளையடித்த நாள்
ரயர்கள் பெற்றோல் ஊற்றி எரியூட்டி சேதமாக்கிய நாள்
எம் இனத்தவர்க்கு ஆடிக் கலவரம் என்றுமே கறுப்பு யூலைதான்