வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-20.07.2023
கவி இலக்கம்-1726
விடுமுறை வந்தாலே
————————–
விடுமுறை வந்தாலே
மகிழ்வில் மனதிலே பெரும் வியப்பு
வருடந்தோறும் வந்து போகும் விடுமுறை
காலத்தை பொறுத்து வித்தியாச விடுமுறை
தாயக மண்ணில் விடுமுறை கழிப்பது அற்புதம்
உள்ளமதில் உவகை பொங்கும்
கண்ணில் தோன்றும் காட்சிகள்
கணப் பொழுதில் வந்து வந்து போகும்
எம் சொந்த உறவுகளை சந்திப்பதில்
விரும்பிய உணவு உண்டு மகிழ வைக்கும்
சுட்டெரிக்கும் வெப்ப தாங்க ஆற்ற
நீர் பாயும் இடங்கள் செல்ல நேரிடும்
கோலங்கள் மாறும் கொள்கைகள் தணியும்
காட்சிகள் பார்த்து கனிவாய் மலரும்
ஆடைகளும் குறைவில் அரைக் கோலமாகும்
நீர் ஓட்டங்களில் மக்கள் அலை மோதும்
அலை மோதிட ஆலயங்களில் மக்கள் கூடும்
உறவுகள் குடும்ப சந்திப்பில் மகிழும்
கலை விழாக்களும் கலாச்சாரம் வளரும்
அகிலமெலாம் விடுமுறை ஆனந்தமாகும்
காரியங்களும் பல்கிப் பெருகும்
இளையோர் உன்னத விடுமுறையாக கழிப்பர்