சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-18.07.2023
கவிதை இலக்கம்-239
இயற்கை
—————-
இறைவனின் அற்புத படைப்பினிலே
இயற்கையின் அழகு வனப்பினிலே
பஞ்ச பூதங்கள் உருவினிலே
யற்கை பசுமைகள் நினைவினிலே
வானம் பிளந்து கதிரவன் ஒளியினிலே
சேவல் கூவி எழுப்புகையிலே
முற்றத்து மல்லிகை வாசம் எழுகையிலே
பச்சை பசேலெனன பபுற்தரே பசுமையிலே
ஆடு மாடு புள்ளினங்கள் பலவாய் உலகினிலே
இன்பமான மழைத் தூறல் சாரலிலே
கிணறு குளம் குட்டை நிரம்பி வழிகையிலே
மாலையில் தோன்றும் வானவில் வர்ண அழகினிலே
தோகை விரித்தாடும் அழகிய மயிலினிலே
இசை பாடும் குயிலின் ஓசை ஒலியினிலே
இயற்கை படைப்பு இரவு பகலாக இயற்கை சூழலில்
நின் பசுமையே எம் வாழ்வினிலே