கவிதை நேரம்-15.06.2023
கவி இலக்கம்-1704
வெயிலோ வெயிலோ
—————————
பசுமை நிறைந்த புவிதனை
இறைவன் இயற்கை பரிசானாய்
கார் முகில் கிழித்து
வெளி தேடும் கதிரவனே
பொய்யெனப் பொழிந்து
பொன் நிறமான கதிரொளியே
கோடை காலமென வந்தாய்
சுட்டு எரித்து மயக்கிறாய்
தும்மல் இருமல் கண்கடி
ஒவ்வாமை தந்து உபத்திரம் ஆகிறதே
காற்று சற்று தடவினால் சுகமே
இரவு நித்திரை பாதியாகின்றதே
நிறைய பானம் குடிப்போம்
உடல் வெப்பம் தணிப்போமே
நீர் தேடி சுற்றுலா போவோமே
கண்ணில் கண்ணாடி தலை தொப்பி
வெள்ளை பருத்தி உடைகள் அணிவோமே
உன்னை வரவேற்ற மலர்களெல்லாம்
வாடி வதங்கி கருகி போகின்றனவே
சில இடங்கள் காட்டுத் தீயும் பரவலே
இயற்கை கோலங்கள் மாற்றமே
சுற்றுலா ஓடுங்கள் ஆறு கடல் நீந்துங்கள்
சந்தோசம் பெற்று நன்றாக அனுபவியுங்கள்