வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-01.12.2022
கவிதை இலக்கம்-1606
வழியைத் தேடுவோம்
—————————-
இருண்ட பாதையில் இன்று நாம்
அற்புத வாழ்க்கை அலங்கோலமானதே
இயல்பு வாழ்க்கை தொலைந்து போகுதே
மின்சாரக் கட்டணம் உயர்வும் கட்டுப்பாடனாதே
சிக்கனமாக தண்ணீர் பாவிக்க வைக்கவே
பாத்திரம் கழுவ குளிக்கவோ யோசிக்க நேருதே
பொருட்கள் விலையேற்றம் பொருளதார பிரச்சினையே
பசி பட்டியினில் மக்களின் கொடுமையே
இரவு பகலாக குளிரில் வேலையுமே
பணம் பற்றாக்குறை கனவை புதைக்கிறதே
ஆழ்ந்த அமைதியில் இரவில் தூக்கமில்லையே
மகத்தான மாதமாய் மார்கழி பிறக்கையிலே
நல்லதாக யாவும் பெற்று வாழ இறைவன் துதியே
நல்வாழ்வு கிடைக்க நாம் வழி தேடி சிறப்போமே