சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-09.05.23
கவிதை இலககம்-221
காணி
———-
பாரதி காணி நிலம் வேண்டும் கண்ணம்மா
என் காணி நிலம் பறி போனது ஏனோ சின்னம்மா
பேணி காத்த காணி என்னம்மா
ஆமிகள் பரம்பரை சொத்தை பறித்தது சொல்லம்மா
தமிழர் ஆண்ட பரம்பரை சொத்து தானம்மா
புத்தர் சிலை எழும்புவது அநியாய செயல் என்னம்மா
தோப்பும் சோலையும் நிறைந்த காணி பாரம்மா
ஆப்பு வைக்குது அரசு ஏமாற்றுவது ஏனம்மா
அப்பாவி தமிழர்கள் பரம்பரை காணிகளே
அன்னியர் கையில் பறி போகுது பாரம்மா
நிற்கதியாய் எம் மக்கள் நடுத் தெருவில்
ஏதிலிகளாக ஆவார்கள் உண்மை தானம்மா
தமிழ் அரசியல் வாதிகள் கண் மூடி விட்டார்களோ
கேள்வி குறியாப் போச்சு விடை கூற முடியாதம்மா
எம்மவர் வாழ்வில் நாடே அந்நியர் கையில் தானம்மா