சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.11.2022
கவி இலக்கம்-202
நினைவு நாள்
———————–
பிறப்பவர் இறப்பதுதான் உண்மை
இருப்பவர் நாளை இங்கு இல்லை
இறப்பதை எண்ணி ஏழை நெஞ்சு அழுகிறது
பிரிவின் நினைவு நாள் நினைவாகிறது
ஊரைக் கூட்டி உணவழித்து செலவாகிறது
மாண்டவர் திரும்புவார் அகராதியில் இல்லை
விதிவழி வந்து எழுதி எடுத்து சென்றது
காலங்கள் சென்றாலும் மறக்க முடியாதது
பிரிந்தோரின் வரலாறுகள் உடமைகள் நினைவில்
நினைவு நாளல்ல ஒவ்வொரு நாளும் மனதில் வரும்