வியாழன் கவிதை

Jeya Nadesan

கவிதை நேரம்-04.05.2023
கவி இலக்கம்-1683
மறக்க முடியாத துயரச் சம்பவம்
—————————————-
கொடூர படு கொலையின் துயரச் செய்தி
உலக தீவக மக்களே அதிர்ச்சி சம்பவமானது
எம் தீவக மக்களுக்கு பெரும் ஆறாத் துயரம்
மாவிலி இறங்கு துறை வழியின் முற்றத்து முன்னதாக
தவத்திரு தனிநாயக அடிகளார் சிலை முன்னாலே
கடற் படையினரின் முகாம் பக்கத்திலே
புனித சவேரியர் ஆலயம் அருகினிலே
மிக அழகான வீட்டில் உணவு உவந்தளித்த
குமுதினி படகின் படுகொலை செய்த
கணவரின் மனைவியார் செல்லமாக செல்லம்
ஒரு குடும்பத்திலே பூரணம் நாகரத்தினம் பூமணி
பூமணி கணவர் உறவினர் ஒருவர் உட்பட
ஆறுபேர் படுகொலை செய்யப்பட்டு இறந்தனர்
நான் படிக்கிற காலத்திலே நாலு சகோதரிகள்
ஒன்றாய் வீதியை அதிர வைத்து நடப்போம்
பேச்சிலே பணிவும் பெருமையற்றவர்களாக
சாதிக்கும் நினைவுகளும் வாதிக்காத தன்மையும்
அவர்கள் இல்லமதில் நண்பிகளாக கண்டு கொண்டேன்
கோவில் திருவிழா,பிறந்த நாள் கொண்டாட்டம் என
வெளியிலிருந்து வந்தும் ஒன்று சேர்ந்த சகோதரிகள்
ஒன்றாக படுகொலை செய்து உயிரை எடுத்தானே
உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்த கொடூரன்
துடிக்க துடிக்க கத்தியால் வெட்டி கொள்ளை எடுத்தானே
நன்றியான காவல் காத்த நாயும் விட்டு வைக்கவில்லை
அன்போடு பழகி நேசத்தோடு உறவாடியவர்கள்
என்றுமே காண முடியாத ஆறாத் துயரம் மீளாக்கவலை
பிள்ளைகள் உறவுகள் அயலவர் கண் பிதுங்கி
கண்ணீரும் கம்பலையுமாக துடி துடிக்கின்றனர்
பாவிகள் நாம் பரிதவித்து துடிக்கின்றோம்
அழுகிறோம் நாமும் எண்ணியே என்றும் இருப்போம்
உங்கள் நினைவுகளும் பாச உணர்வுகளும் நிலைத்திருக்கும்
எல்லோர் ஆன்மாவும் நற்பேறு பெற இறைஞ்சுகிறோம்