சந்தம் சிந்தும் கவிதை

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-18.10.2022
இலக்கம்–196
எம்மால் முடியும்
————————
எல்லாம் தெரியும் என்பர் பலர்
என்னால் முடியும் என்பர் சிலர்
முயற்சித்து வெற்றி பெறுவர் பலர்
முயற்சித்தும் தோல்வி அடைவோர் சிலர்
கஷ்டங்கள் கண்டு கலங்குவோர் பலர்
துன்பங்களில் துவண்டு முடங்குவதில் சிலர்
எம்மால் முடியுமென நம்பிக்கையில் பலர்
சாதனை பெற்று வரலாறு படைப்போர் சிலர்
அடுத்தவரின் உதவியை நாடார் பலர்
தனித்து நின்று சாதித்து முடிப்பர் சிலர்
செத்தால் பிளைக்க அறியான்
மற்றவை எல்லாம் மனிதனால் ஆகும்